கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியதோடு, நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட்டில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலமாக, கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகுகளையும், வறட்டிகளையும் வைத்து சிரமப்படும் ஏழைப் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.