
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டையாடி வழக்கின் விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மானை வேட்டையாடியது தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 2007-ம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2013-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. பின்னர், ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த, வழக்கின் விசாரணை குறித்து இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் சல்மான்கான். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.