தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி மற்றும் புதுமை படைத்தலுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தேச விரோதமாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு, அவர்களுக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்களின் விமர்சனங்கள் என அந்தப் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அரசியல் சக்கரம் சுழன்று வரும் நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழகம், சிறந்த பார்வையாளர் என்ற பிரிவின் கீழ் உள்ள விருதைப் பெறுகிறது. குடியரசுத்தலைவர் மாளிகையில் வரும் 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை புதுமை படைத்தல் தொடர்பான கண்காட்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி சிறப்பாகச் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை வரும் 14-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கவுள்ளார்.