மேகாலய மாநிலத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிற்பகல் 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3-ஆகப் பதிவானது.
பின்னர் 3.21 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் நான்கு நிமிடங்களுக்கு நீடித்தது. இது, 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என மேகாலய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.