Enable Javscript for better performance
அமெரிக்காவிடம் மோடி அரசு சரண்: இந்திய கம்யூனிஸ்ட்- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவிடம் மோடி அரசு சரண்: இந்திய கம்யூனிஸ்ட்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவத் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
     இதன்மூலம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாடுகளிடைய ராணுவத் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
     அமெரிக்காவுடனான இந்தியாவின் ராணுவ உறவு மிகவும் நெருக்கமாக அமையும். ஏறக்குறைய அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இந்தியா இருக்கும். இருநாட்டு ராணுவங்களும் பரஸ்பரம் மற்றவர்களது ராணுவ நிலைகளையும், தளவாடங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மத்திய அரசின் இந்த முடிவு பெரிய சர்ச்சையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
     இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
     அமெரிக்காவின் நெருக்குதலுக்கு மோடி அரசு அடிபணிந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் ஆதிக்கம் தங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று போராடி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வரவேற்பு அளிக்கிறது.
     அமெரிக்கா நமது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த வகை செய்யும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது.
     இதுபோன்ற முக்கிய விஷயங்களை முதலில் நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களின் கருத்தைக் கேட்டு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தேசத்தின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
     தேசத்தின் மீது பற்றுள்ளவர்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai