Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவர்கள் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
     அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.14) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
     நாடாளுமன்றத்தில் அஞ்சலி: மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எம்.வெங்கய்ய நாயுடு, தாவர் சந்த் கெலாட், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
     அம்பேத்கர் பற்றிய தகவல்கள் அடங்கிய சிறிய புத்தகமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     சோனியா புகழாரம்: இதனிடையே, அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
     இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
     நவீன இந்தியாவில் தனித்துவம் வாய்ந்த மனிதர்களில் அம்பேத்கரும் ஒருவர். தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு, அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.
     ஐ.நா.வில் கொண்டாட்டம்: இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில், முதல் முறையாக அம்பேத்கர் பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai