Enable Javscript for better performance
இந்திய மீனவர்கள் 24 பேர் பாக். படையினரால் கைது- Dinamani

சுடச்சுட

    

    குஜராத் மாநிலம், ஜகாவ் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 24 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     இதுதொடர்பாக தேசிய மீனவர்கள் கூட்டமைப்பின் செயலர் மணீஷ் லோதாரி, ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     குஜராத் மாநிலம் போர்பந்தர், ஓகா ஆகிய கடலோர நகரங்களைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர், சர்வதேச கடல் எல்லைப் பகுதியான ஜகாவுக்கு அருகே வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், 24 மீனவர்களையும் கைது செய்து கராச்சி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர் என்று மணீஷ் லோதாரி தெரிவித்தார்.
     சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 3 மாதங்களில் இந்திய மீனவர்கள் 191 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர் என்பதும், அவர்களில் 172 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai