Enable Javscript for better performance
உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பூரம் திருவிழா: உம்மன் சாண்டி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பூரம் திருவிழா: உம்மன் சாண்டி விளக்கம்

    By PTI  |   Published on : 15th April 2016 03:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiruchur-puram

    திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூரில், கோயிலின் பாரம்பரியத்தை விட்டுவிடாமல், அதே போல உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பூரம் திருவிழா கொண்டாடப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

    பூரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் உம்மன் சாண்டி, மாநில உள்துறை ரமேஷ் சென்னிதலா, திருச்சூர் மாவட்ட அதிகாரிகள், பூரம் திருவிழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  உம்மன் சாண்டி, உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பூரம் திருவிழா கொண்டாடப்படும். பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாகும். பூரம் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் உம்மன் சாண்டி.

    கொல்லம், புற்றிங்கல் தேவி கோயிலில் கடந்த 10ஆம் தேதி காலை வாண வேடிக்கையால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பூரம் திருவிழாவில் பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து, பூரம் திருவிழாவை நடத்தி வரும் பாறமேக்காவு, திருவம்பாடி தேவஸ்தானங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுவை, நீதிபதிகள் தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதையடுத்து, நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ""125 டெசிபல் அளவுக்கு மிகாமல், குறைவான ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கலாம். வாண வேடிக்கைகளை நடத்தலாம். மேலும், அங்கீகரிக்கப்படாத ரசாயனங்களால் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதியில்லை'' என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai