Enable Javscript for better performance
எதிர்க்கட்சிகளின் நற்சான்றிதழ் எனக்குத் தேவையில்லை- Dinamani

சுடச்சுட

    

    எதிர்க்கட்சிகளின் நற்சான்றிதழ் எனக்குத் தேவையில்லை

    By  கொல்கத்தா,  |   Published on : 15th April 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    19

    எதிர்க்கட்சிகள் எனக்கு நற்சான்றிதழ் தர வேண்டியதில்லை; பொதுமக்கள் சான்றளித்தாலே போதுமானது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
     மேற்கு வங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா பேசியதாவது:
     இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
     என் மீது குற்றம்சாட்டுவது ஒன்றே அக்கட்சிகளின் கொள்கை என்பதைப் போல அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. ஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை மக்கள் அறிவார்கள்.
     எனக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்றிதழ் தரத் தேவையில்லை. பொதுமக்கள் சான்றளித்தாலே போதுமானது. மேற்கு வங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளாக இடதுசாரிக் கூட்டணி அரசு நடத்தி வந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே எனது அரசின் பெரிய சாதனையாகும் என்றார் மம்தா பானர்ஜி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai