Enable Javscript for better performance
என்ஐடி மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: சுனில் சேத்தி- Dinamani

சுடச்சுட

    

    என்ஐடி மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: சுனில் சேத்தி

    By DN  |   Published on : 15th April 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரில் என்ஐடி மாணவர்கள் மோதல் தொடர்பாக பிற மாநில மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுனில் சேத்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    கடந்த வாரம் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்வியை என்ஐடி கல்வி நிறுவனத்தில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் கொண்டாடினர்.

    இதற்கு பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    இந்த விவகாரத்தில் பிற மாநில மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது தேசியவாதத்தை நசுக்கும் செயலாகும்.

    பிற மாநில மாணவர்கள் நாட்டுக்கு ஆதரவாகவே கோஷமிட்டுள்ளனர். அது குற்றமா? நியாயமாக, அந்த மாணவர்களை என்ஐடி கல்வி நிறுவனம் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    எனவே, அந்த வழக்குகளை என்ஐடி கல்வி நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai