Enable Javscript for better performance
ஏஎஃப்ஐ தலைவராக மீண்டும் தேர்வாகிறார் அடில்லே சுமரிவல்லா- Dinamani

சுடச்சுட

    

    ஏஎஃப்ஐ தலைவராக மீண்டும் தேர்வாகிறார் அடில்லே சுமரிவல்லா

    By DN  |   Published on : 15th April 2016 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய தடகள விளையாட்டுகளுக்கான கூட்டமைப்பின் (ஏஎஃப்ஐ) தலைவராக அடில்லே சுமரிவல்லா போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

     இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர், செயலர், பொருளாளர் பதவிக்கான தேர்தல்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. இதில், தலைவர் பதவிக்காக சுமரிவல்லா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

     வேறு எவரும் போட்டியிடாத காரணத்தால் ஏஎஃப்ஐயின் தலைவராக மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2012ஆம் ஆண்டு ஏஎஃப்ஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமரிவல்லா, தற்போது 2016-2020 வரையிலான காலகட்டத்திற்கு தலைவராக நீட்டிப்பார்.

     அதேபோல், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும், தற்போதைய செயலாளர் சி.கே.வால்சன், பொருளாளர் பி.கே.ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

     இந்தத் தேர்தலுக்கான அதிகாரியாக தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

     தேர்தலை அடுத்து, ஏஎஃப்ஐயின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதில் நடப்பு சீசனுக்கான தடகளப் போட்டிகள், அணிகள் தலைமையிலான தடகள லீக் முன்மொழிவு ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai