Enable Javscript for better performance
ஏழுமலையானுக்கு ரூ. 20 லட்சம் நன்கொடை- Dinamani

சுடச்சுட

    

    திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 20 லட்சம் நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.
     தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் என ரூ. 20 லட்சம் நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.
     இதற்கான வரைவோலைகளை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிஎம்ஆர், எம்விஆர் நிறுவன உரிமையாளர்கள் திருமலையில் செயல் இணை அலுவலர் சீனிவாசராஜுவிடம் அளித்தனர்.
     தாலி நன்கொடை: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள ஸ்ரீநிவாசா ஸ்பிரிச்சுவல் அண்ட் டெவலப்மென்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள், புதன்கிழமை இரவு திருமலை ஏழுமலையானுக்கு 72.3 கிராம் எடையுள்ள தாலியை தேவஸ்தான செயல் அலுவலர் சாம்பசிவ ராவிடம் நன்கொடையாக வழங்கினர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
     உண்டியல் காணிக்கை: திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் திருமலை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில், ரூ. 2.55 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai