Enable Javscript for better performance
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்

    By DN  |   Published on : 15th April 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி, கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ,3,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கனரா வங்கியின் மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டப்பட உள்ளது.

    அதன்படி, சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப கனரா வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திரங்கள்  வெளியிடப்பட உள்ளது.

    மேலும், தனியார் நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை ஒதுக்கீடு செய்து ரூ.2,000 கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கடன் பத்திர வெளியீடு ஏப். 18-ஆம் தேதி தொடங்கி ஏப். 27-ஆம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கனரா வங்கி வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 8.40 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai