Enable Javscript for better performance
கட்டணம் செலுத்தாத நோயாளிகள் சிறைபிடிப்பு: \\\"மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    கட்டணம் செலுத்தாத நோயாளிகள் சிறைபிடிப்பு: "மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'

    By  மும்பை,  |   Published on : 15th April 2016 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் மருத்துவத்துக்கு ஆகும் கட்டணங்களை செலுத்தாத நோயாளிகளை சிறைபிடிக்கும் மருத்துவமனைகளின் நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     இதுதொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
     அந்த மனுவில், "மகாராஷ்டிரத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்துக்கு ஆகும் கட்டணங்களை நோயாளிகள் செலுத்தவில்லை எனில், மருத்துவமனை நிர்வாகத்தால் அவர்கள் சிறைபிடித்து வைக்கப்படுகின்றனர்.
     இதேபோல், சிகிச்சைக்கு ஆன கட்டணத்தை செலுத்தத் தவறினால், உயிரிழப்பவர்களின் உடல்களையும் உறவினர்களிடம் மருத்துவமனைகள் ஒப்படைப்பதில்லை. அத்தகைய மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தர வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
     இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள், "இதுபோன்ற சட்டவிரோத செயல்களைக் கண்டறிந்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவிடம் வரும் புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் தடுப்பதற்கு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களிடம் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai