Enable Javscript for better performance
கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி: எடியூரப்பா நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி: எடியூரப்பா நம்பிக்கை

    By  பெங்களூரு,  |   Published on : 15th April 2016 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    35

    கர்நாடகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
     பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக வியாழக்கிழமை பதவியேற்று அவர் பேசியது:
     காங்கிரஸின் ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சியடையவில்லை. பல்வேறு முறைகேடுகளில் சிக்கி மாநிலமே மூழ்கும் படகாக மாறியுள்ளது.
     மாநிலத்தில் பாஜகவைப் பலப்படுத்தி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றி, கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவான காங்கிரஸ் அல்லாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்றுவோம். இதற்காக பாஜகவினர் அனைவரும் திறம்படச் செயல்பட வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai