Enable Javscript for better performance
குண்டு வெடிப்பு: சத்தீஸ்கரில் காவலர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த வனப்பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
     இதுகுறித்து அந்த மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் இந்திர கல்யாண் எலசேலா கூறியதாவது: பிஜாப்பூர் மாவட்டத்தின் மாத்வாடா எனும் கிராமத்துக்கு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் (சிஆர்பிஎஃப்), காவல் துறையினரும் இணைந்து, நக்ஸல் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது அந்தப் பகுதியில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அயிது லேகம் என்ற காவலர் காயமடைந்தார். இதயைடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள நக்ஸலைட் தீவிரவாதிகளைத் தேடி வருகிறோம் என்றார் இந்திர கல்யாண் எலசேலா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai