Enable Javscript for better performance
கேரள கோயில் வெடி விபத்து: பலி 114 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    கேரள கோயில் வெடி விபத்து: பலி 114 ஆக உயர்வு

    By  திருவனந்தபுரம்,  |   Published on : 15th April 2016 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.
     கொல்லம் அருகே பரவூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவையொட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 108 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 400 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
     அவர்களில் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாள்களில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், இந்த விபத்தில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யன் என்பவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது.
     திருவனந்தபுரம், கொல்லம் மருத்துவமனைகளில் 300-க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai