Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீர்: வன்முறை காரணமாக பதற்றம் நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர்: வன்முறை காரணமாக பதற்றம் நீடிப்பு

    By  ஸ்ரீநகர்,  |   Published on : 15th April 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பதற்றம் நீடித்தது.
     இதனால், பல்வேறு இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைப் போன்று வெறிச்சோடிய நிலை காணப்பட்டது.
     ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஹண்ட்வாரா நகரில் சிறுமி ஒருவரிடம் பாதுகாப்புப் படை வீரர் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் மோதல் மூண்டது. இதில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
     இதேபோன்று, குப்வாரா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போதும் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
     அடுத்தடுத்து ஒரு சில நாள்களில் நடைபெற்ற இந்தக் கொலைகளைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், வடக்கு காஷ்மீரில் உள்ள மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா போன்ற பகுதிகளில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
     ஸ்ரீநகர் மாநகரத்துக்கு உள்பட்ட மஹராஜ்கஞ்ச், கன்யர், நவ்ஹட்டா, மைசுமா உள்ளிட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிட்டதைப் போன்ற நிலை காணப்பட்டது.
     காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
     வதந்திகள் பரவுவதைத் தடுக்க செல்லிடப்பேசிகளுக்கான இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai