Enable Javscript for better performance
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு குறித்து நிறுவனங்களுடன் ஆலோசிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் துறையிலும் இடஒதுக்கீடு குறித்து நிறுவனங்களுடன் ஆலோசிக்க வேண்டும்

    By  ஹைதராபாத்,  |   Published on : 15th April 2016 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17

    தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
     ஹைதராபாதில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
     தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. எனினும், இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பெரிய தொழில் அமைப்புகள், தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். எனினும், இதில் பல்வேறு சிக்கல் ஏற்படும்.
     சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களைக் கைதூக்கி விடுவது மிகவும் அவசியமானதாகும். அதற்கான உறுதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
     தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளையும் கொண்டு வர வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனைத்து விஷயங்களும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புகிறோம். அப்படி இருக்கும்போது அதனை அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றார் திக்விஜய் சிங்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai