Enable Javscript for better performance
திருச்சூர் பூரம் திருவிழா: வாண வேடிக்கை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சூர் பூரம் திருவிழா: வாண வேடிக்கை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

    By  கொச்சி,  |   Published on : 15th April 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiruchur-puram

    கேரள மாநிலம், திருச்சூரில் புகழ்பெற்ற வடக்குந்நாதன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் பூரம் திருவிழாவில் குறைவான ஓசை எழுப்பக்கூடிய வாண வேடிக்கைகளை நடத்துவதற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

     கொல்லம், புற்றிங்கல் தேவி கோயிலில் கடந்த 10ஆம் தேதி காலை வாண வேடிக்கையால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பூரம் திருவிழாவில் பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து, பூரம் திருவிழாவை நடத்தி வரும் பாறமேக்காவு, திருவம்பாடி தேவஸ்தானங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
     
    இந்த மனுவை, நீதிபதிகள் தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதையடுத்து, நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ""125 டெசிபல் அளவுக்கு மிகாமல், குறைவான ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கலாம். வாண வேடிக்கைகளை நடத்தலாம். மேலும், அங்கீகரிக்கப்படாத ரசாயனங்களால் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதியில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.

     முன்னதாக, வழிபாட்டுத் தலங்களில் இரவு நேரங்களின்போது அதிக ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதற்கு, கேரள உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தடை விதித்திருந்தது.
     அனைத்துக் கட்சிகள் கூட்டம்: இதனிடையே, வழிபாட்டுத் தலங்களில் வாண வேடிக்கை நடத்துவதற்கு, முழுமையாக தடை விதிப்பதில்லை என்றும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாண வேடிக்கை நடத்த அனுமதிக்கலாம் என்றும் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai