Enable Javscript for better performance
தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வந்தது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வந்தது

    By DN  |   Published on : 15th April 2016 12:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kajari

    இரண்டாம் கட்ட தனியார் கார் கட்டுப்பாடு திட்டம் தில்லியில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) முதல் தொடங்கி 15 நாள்களுக்கு அமலுக்கு வந்தது.

    தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

    தில்லியின் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டத்தின்படி, ஒற்றைப்பட நாள்களில் ஒற்றைப்படை எண்களில் முடியும் வாகனங்கள் மட்டும், இரட்டைப்படை நாள்களில் இரட்டைப்படை எண்களில் முடியும் வாகனங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர, நான்கு சக்கர ஒற்றைப்படை கூட வாகன இயக்கம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஏப்ரல் 30 வரை தொடரும்.

    இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிச் சீறுடையுடன் செல்லும் மாணவர்களின் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    வாகனக் கட்டுப்பாட்டை கண்காணிக்க 10 சந்திப்புகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் தில்லி போக்குவரத்து காவல் துறையினர் 2 ஆயிரம் பேரும், தில்லி அரசின் கண்காணிப்பு அதிகாரிகள் 580 பேரும், தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேரும் ஈடுபடுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai