Enable Javscript for better performance
தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு பத்மா சுப்ரமணியம் நியமனம் - Dinamani

சுடச்சுட

    

    தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு பத்மா சுப்ரமணியம் நியமனம்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
     இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன் புதிய தலைவராக, "ஜனசத்தா' ஹிந்தி நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
     இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை, மத்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். ராம் பகதூர் ராய் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பிரபல நடனக் கலைஞர் சோனல் மான்சிங், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, ஓவியக் கலைஞர் வாசுதேவ் காமத், மத்திய கலாசாரத் துறையின் செயலர் உள்ளிட்ட 19 பேர் இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.
     மேலும், தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் புதிய தலைவராக, பண்டைய இந்திய வரலாற்றுக் கல்வி நிலையத்தின் தலைவர் டாக்டர் சுஷ்மிதா பாண்டே நியமிக்கப்படுகிறார். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
     கலைத் துறை பற்றிய ஆராய்ச்சி, கல்விச் சேவைகளை வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்வதற்காக, கடந்த 1987ஆம் ஆண்டில் இந்திரா கந்தி தேசிய கலைகள் மையம் தொடங்கப்பட்டது.
     இதனிடையே, இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை மாற்றியமைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கமளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai