Enable Javscript for better performance
தேச விடுதலைக்கு பங்களிக்காதவர்கள் தேசியக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடியைப் பறக்கவிட முயற்சிக்கின்றனர்: நிதீஷ் - Dinamani

சுடச்சுட

    

    தேச விடுதலைக்கு பங்களிக்காதவர்கள் தேசியக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடியைப் பறக்கவிட முயற்சிக்கின்றனர்: நிதீஷ்

    By DN  |   Published on : 15th April 2016 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேச விடுதலைக்காக எந்தவிதத்திலும் பங்களிக்காதவர்கள், தற்போது தேசியக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடியைப் பறக்கவிட முயற்சிக்கின்றனர் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார் குற்றம்சாட்டினார்.

    பிகார் தலைநகர், பாட்னாவில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்ததின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதீஷ் குமார் பேசியதாதவது:

    இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பி அம்பேத்கரின் பெயரை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால், மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தேசவிரோதச் சட்டத்தின் கீழ் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

    சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அவரது கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுகின்றன

    மேலும், தேச விடுதலைக்காக எந்தவிதத்திலும் பங்களிக்காதவர்கள், தற்போது தேசியக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடியைப் பறக்கவிட முயற்சிக்கின்றனர் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai