Enable Javscript for better performance
பாஜக 3-ஆவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

  

  பாஜக 3-ஆவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியல் தில்லியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக, முதல் கட்டமாக 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவித்தது.
   இதைத் தொடர்ந்து, 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 10ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, 57 தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் மேலிடம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் தொகுதியின் பெயர்):
   தனித் தொகுதிகள்: அமர்நாத் (பூந்தமல்லி); வெங்கடேசன் (எழும்பூர்); மனோகரன் (ஸ்ரீபெரும்புதூர்); சி. விஜயன் (அரக்கோணம்); விமலா ராமசந்திரன் (கீழ்வைத்தினன்குப்பம்); வேதியப்பன் (அரூர்); திருசெல்வகுமார் (வானூர்); குப்புசாமி (ராசிபுரம்); அன்பு (எ)அன்பரசன் (கூடலூர்); அழகுமணி (நிலக்கோட்டை); பி. நவீன்குமார் (கிருஷ்ணராயபுரம்); கலியபெருமாள் (பெரம்பலூர்); உதயகுமார் (திருத்துறைப்பூண்டி); எஸ். வாசுதேவன் (திருவிடைமருதூர்); கே.செல்லம் (பெரியகுளம்); ராமசாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்); ராஜ்குமார் (வாசுதேவநல்லூர்).
   பொதுத் தொகுதிகள்: டாக்டர் ஜமீலா (ராயபுரம்); தாமரை கஜேந்திரன் (சேப்பாக்கம்); சிவலிங்கம் (ஆயிரம் விளக்கு); டால்பின் ஸ்ரீதர் (வேளச்சேரி); சத்யநாராயணன் (ஆலந்தூர்); கோபி அய்யாசாமி (பல்லாவரம்); வேதா சுப்ரமணியன் (தாம்பரம்); எஸ்.இளங்கோவன் (வேலூர்); ஜி. வெங்கடேசன் (வாணியம்பாடி); பிரேமநாதன் (வேப்பனஹள்ளி); ஆறுமுகம் (தருமபுரி); தமிழரசி தேவதாஸ் (போளூர்); பழனிவேலு (விக்கரவாண்டி); பாலசுப்பிரமணியன் (மேட்டூர்); சந்திரசேகர் (பெருந்துறை); பி.ஜி. மோகன் குமார் (அந்தியூர்); கண்ணன் (எ) தேவராஜ் (கோவை வடக்கு); கருமுத்து தியாகராஜன் (தொண்டாமுத்தூர்); முத்துராமலிங்கம் (கிணத்துக்கடவு); சிவகுமார் (பொள்ளாச்சி); யு.கே.பி.என். கந்தசாமி (உடுமலைப்பேட்டை); எஸ்.பி. இளஞ்செழியன் (ஆத்தூர்); செந்தில் தீபக் (மணப்பாறை); ஏ. ராஜேஷ் குமார் (ஸ்ரீரங்கம்); சிட்டிபாபு (திருவெறும்பூர்); எஸ். சேது அரவிந்த் (மண்ணச்சநல்லூர்); எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஜெயங்கொண்டம்); பி. செல்வம் (கடலூர்); சக்தி கணபதி (குறிஞ்சிப்பாடி); என். ரங்கதாஸ் (திருவாரூர்); டி. குணசேகரன் (பாபநாசம்); பி.வி. பூபதி கக்கன் (மேலூர்); கார்த்திக் பிரபு (மத்திய மதுரை);
   ஏ. சசிகுமார் (மேற்கு மதுரை); பிரபாகரன் (கம்பம்); ராமசந்திரராஜா (ராஜபாளையம்); பால ரவிராஜன் (திருச்சுளி); பி.டீ.அரசகுமார் (முதுகுளத்தூர்); ஜெயராமன் (திருச்செந்தூர்); ஏ. மகாராஜா (திருநெல்வேலி).
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai