Enable Javscript for better performance
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்

    By dn  |   Published on : 15th April 2016 04:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mallaya

    புது தில்லி : வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

    இந்திய அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதன் பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணத்தை கடனாகப் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை.

    விஜய் மல்லையா மீதான கடன் மோசடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மத்திய அரசு, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai