Enable Javscript for better performance
மிஸோரமில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மிஸோரம் மாநிலத்தில் புதன்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியது.
     நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் சேதமடைந்தன. 5 பேர் காயமடைந்தனர்.
     காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக ஐஸாலில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
     நிலநடுக்கம் காரணமாக மிஸோரம் தலைநகர் ஐஸாலில் அமைந்துள்ள பழைமையான தேவாலயத்தின் கட்டடத்திலும், வேறு சில கட்டடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai