Enable Javscript for better performance
மோசடி வழக்கு: ஜேடியு எம்.பி.யை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    மோசடி வழக்கு: ஜேடியு எம்.பி.யை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனது விமானப் பயணங்களுக்கான சலுகையைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி அனில் சஹானியை விசாரிப்பதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி சிபிஐக்கு அனுமதி அளித்தார்.
     நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு உள்நாட்டில் பயணங்கள் மேற்கொள்ள ஆண்டுதோறும் 34 விமான பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம்.
     இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. அனில் சஹானி, எந்த விமானப் பயணமும் மேற்கொள்ளாமல் போலியான பயணச் சீட்டுகளைக் காண்பித்து ரூ.23.71 லட்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
     மேலும் இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனில் சஹானியிடம் முறையான விசாரணை மேற்கொள்ள மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி சிபிஐக்கு வியாழக்கிழமை அனுமதியளித்தார்.
     இதுகுறித்து சஹானி கூறுகையில், "எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பாஜக செய்யும் சதி இது. இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai