Enable Javscript for better performance
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை - Dinamani

சுடச்சுட

    
    onion

    மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து தேவை குறைவாக உள்ளதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மாநிலத்தின் சந்தை மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 காசுக்கு விற்பனையானது. தற்போது அமோக விளைச்சல் காரணமாக சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். அதே வேளையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

    இது குறித்து டிகென் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 30 காசுக்கு ஒரு கிலோ வெங்காயம் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். சந்தைக்கு கொண்டு வருவதற்கான செலவை கூட எங்களால் பெற முடியவில்லை. நாள் ஒன்று சுமார் 5 ஆயிரம் மூட்டைகள் இந்த சந்தைக்கு வரும். தற்போது 4 ஆயிரம் மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.

    நாங்கள் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தற்போதைய விலை எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai