Enable Javscript for better performance
வெளிநாட்டில் இருப்பவர்களும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் இருப்பவர்களும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

    By DN  |   Published on : 15th April 2016 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதியை ஐஆர்சிடிசி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டவர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் இருந்தே ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    இப்போதுள்ள முறைப்படி வெளிநாட்டவர்களும், வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்தியாவில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர் அல்லது உறவினர் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

    இந்தியாவில் இப்போது நேரடியாக ரயில்வே டிக்கெட் மையத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, இணையதளம் வாயிலாக டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து.

    இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த டிக்கெட் முன்பதிவில் 58 சதவீதம் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம்தான் நடைபெறுகிறது.

    ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நொடியில் 250 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். எதிர்காலத்தில் இந்த வேகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai