Enable Javscript for better performance
2019 மக்களவைத் தேர்தலில் நிதீஷுடன் கூட்டணி?: காங்கிரஸில் முரண்பட்ட கருத்து- Dinamani

சுடச்சுட

    

    2019 மக்களவைத் தேர்தலில் நிதீஷுடன் கூட்டணி?: காங்கிரஸில் முரண்பட்ட கருத்து

    By  புது தில்லி  |   Published on : 15th April 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16

    அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து தற்போது முடிவு எடுக்க இயலாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
     பிகார் முதல்வராக உள்ள நிதீஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, "2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்த மகா கூட்டணியை அமைக்க வேண்டும்; அதில், காங்கிரஸ், இடதுசாரிகள் இடம்பெற வேண்டும்' என்று கூறியிருந்தார்.
     இந்நிலையில், ஹைதராபாதுக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் "2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க தேசிய அளவில் நிதீஷ் குமாருடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் தயாராக இருக்கிறது' என்றார்.
     இதனிடையே, திக்விஜய் சிங்கின் கருத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா முரண்பட்டுள்ளார்.
     இதுகுறித்து தில்லியில், செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
     அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. அதேவேளையில், பிகார் தேர்தலைப் போலவே, பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்றார் ஆனந்த் சர்மா.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai