காவல்துறையினரின் அத்துமீறலே இந்தியாவின் முக்கிய மனித உரிமை பிரச்னை: அமெரிக்க ஆய்வறிக்கை

போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்தான் இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை பிரச்சனை என்று அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்தான் இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை பிரச்னை என்று அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் நிலவிய மனித உரிமை பிரச்சனைகள் குறித்த ஆய்வு அறிக்கையினை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று வெளியிட்டார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதற்கு காரணாமானவர்கள் மீது நவடவடிக்கை எடுக்க குஜராத் அரசு தவறிவிட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சிறைச்சாலையில் ஏற்படும் மரணங்கள், சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் செயயப்படும் அத்துமீறல்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்னை.

மேலும், ஊழல், பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைகளில் அடங்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள், சட்டவிரோதமாக ஊடுருவோர், பயங்கரவாதிகள் ஆகியோர் பிரச்னையாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலும், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர், போலீஸார், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்படுவது இன்னொரு முக்கிய மனித உரிமை மீறல் பிரச்னையாகும் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com