சுடச்சுட

    

    மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக

    By  புது தில்லி,  |   Published on : 11th January 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது.
     இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
     மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai