சுடச்சுட

  

  ஹைதராபாதில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐஎஸ் சதி: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

  By ஹைதராபாத்  |   Published on : 01st July 2016 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் 5 பேர், ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை இந்த பயங்கரவாத அமைப்பு ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது.

  இதையடுத்து பழைய ஹைதராபாதின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அதில் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

  கைது செய்யப்பட்ட இளைஞர்களில் 5 பேர், ஐஎஸ் அமைப்பின் உத்தரவின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ள

  தாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

  இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும், நம்பாலி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டுள்ள மற்ற 6 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai