Enable Javscript for better performance
காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை- Dinamani

சுடச்சுட

    

    காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை

    By DN  |   Published on : 03rd July 2016 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    santhiyamahesh

    சுவாதி கொலையை போன்று காதலை ஏற்க மறுத்த இளம்பெண் நடு ரோட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வரும் சருபாய், இவரது மகள் சந்தியா(19). இவர்  தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை செய்துகொண்டு ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் படித்து மாணவன் மகேஷ்(20). இவன் சந்தியாவை ஒரு வருடம் பின்தொடர்ந்து ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான். தனது காதலை பல முறை சந்தியாவிடம் வெளிப்படுத்தியுள்ளான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளான். ஆனால் சந்தியா காதலை ஏற்கவில்லை. இதுகுறித்து மகேஷ் மீது சந்தியா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்த மகேஷ் நேற்று மதியம் சந்தியா வீட்டின் அருகே தனது கதலை மீண்டு தெவித்துள்ளார். அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரமுற்ற மகேஷ் சந்தியா வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது கத்தியால் கழுத்தை அறுத்தான். அதில் சந்தியா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துடிக்க உயிரிழந்தார்.

    சந்தியாவின் உடலை பார்த்து பொற்றோர்கள் கதறி அழும் காட்சி, பார்த்த நெஞ்சங்களை பதறவைத்துள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் கொலையாளி தேடி வந்த நிலையில், கொலையாளி மகேஷ் நேற்று மாலை போலீஸில் சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்துள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீஸார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

    சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில்நிலையித்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கானாவில் மேலும் ஒரு பெண் ஒரு தலைக் காதலால் கத்தியால் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் காதல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி? எப்போது???

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai