Enable Javscript for better performance
விஜய் மல்லையாவின் ராஜிநாமா ஏற்பு: ஹமீத் அன்சாரி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விஜய் மல்லையாவின் ராஜிநாமா ஏற்பு: ஹமீத் அன்சாரி அறிவிப்பு

    By DN  |   Published on : 04th May 2016 07:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijay_mallaya

    புது தில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா தனது எம்.பி. பதவியை நிராகரித்து அனுப்பிய ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஏற்றுக் கொண்டார்.

    பொதுத்துறை வங்களில் ரூ.9,400 கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா மீது, பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளும், காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. பிரிட்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில், விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க மாநிலங்களவை நெறிமுறைகள் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்தது. அதே நேரத்தில், அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்றும் நெறிமுறைகள் குழு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக மாநிலங்களவைத் தலைவருக்கு மல்லையா கடிதம் அனுப்பினார். இந்நிலையில் அவரது ராஜிநாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது.

    இதனிடையே, தில்லியில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை நெறிமுறைகள் குழு கூட்டத்தில் சுயேச்சை எம்.பி.யான மல்லையாவை பதவி நீக்கம் செய்வதற்கு பரிந்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவின் ராஜிநாமாவை ஏற்பதாக, மாநிலங்களவைத் தலவைரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி இன்று மாலை அறிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai