Enable Javscript for better performance
ஆந்திரத்தில் கட்டுமானப் பணியின்போது மண் சரிவு: 7 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் கட்டுமானப் பணியின்போது மண் சரிவு: 7 பேர் பலி

    By DN  |   Published on : 15th May 2016 04:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குண்டூர்: ஆந்திர மாநிலம், லட்சுமிபுரத்தில் வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    லட்சுமிபுரத்தில் வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 30 அடி ஆழத்தில் அடிதளம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பணியில் சனிக்கிழமை இரவு 18 பேர் இருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் 8 பேர் மண்ணில் புதைந்தனர்.

    இதைத் தொடர்ந்து சகத் தொழிலாளர்களின் அலறல் சப்தத்தை அடுத்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு மணலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களை மீட்க முயற்சித்தபோது, பக்கத்தில் இருந்த கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் தடைபட்டன.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு மங்கலகிரியைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்து, மண்ணில் புதையுண்ட சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தில் இறந்தவர்கள் 7 பேரும் குண்டூர் நகரத்துக்குள்பட்ட கொட்டிபடு கிராமத்தைச் சேர்ந்தவர்.

    மாநில சமூக நலத் துறை அமைச்சர் ராவேலா கிஷோர் பாபு சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து, ஆத்திரமடைந்த கொட்டிபடு கிராம மக்கள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். இறந்த 7 பேரது உறவினர்களின் கோபமான மனநிலையை அறிந்த போலீஸார், அமைச்சரை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

    மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை நள்ளிரவு விஜயவாடாவுக்கு வந்த முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

    ரூ.20 லட்சம் இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai