Enable Javscript for better performance
ஒடிஸா அருகே ரோனு புயல்: சூறாவளியுடன் தொடர் மழை - இயல்பு நிலை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா அருகே ரோனு புயல்: சூறாவளியுடன் தொடர் மழை - இயல்பு நிலை பாதிப்பு

    By நமது நிருபர்  |   Published on : 21st May 2016 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ரோனு புயல் வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா கடற்கரை நோக்கி முன்னேறுகிறது.
     கோபால்பூர் கடலோரப் பகுதியில் இருந்து தெற்கு-தென்கிழக்கில் 50 கி.மீ. தூரத்தில் புயல் மையக் கொண்டிருப்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
     "புயல் மேலும் வலுவடைந்து வடகிழக்காக நகரும். வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸாவின் கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்துக்குள் தாக்கும்' என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
     புயலின் தாக்கம் காரணமாக, கஞ்சாம், புரி, குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், பாலாசோர், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
     பாராதீப் துறைமுக நகரில் அதிகபட்சமாக 96 மி.மீ., புரியில் 85 மி.மீ., சந்த்பாலியில் 63 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. புயலின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் உள் மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதியில் 100-110 கி.மீ. வேகத்திலும் வடக்கு கடலோரப் பகுதியில் 70-80 கி.மீ. வேகத்திலும் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடல் மிகவும் ஆக்ரோஷமாக கொந்தளிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் 12 மாவட்டங்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த சூழலையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலர் ஏ.பி.பதி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai