Enable Javscript for better performance
கேரளத்தில் 62% எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்தில் 62% எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

    By  புது தில்லி,  |   Published on : 21st May 2016 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 62 சதவீதம் பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
     அதேபோல மேற்கு வங்கத்தில் 32 சதவீத எம்எல்ஏக்கள் மீது கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
     தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்வாகியுள்ள எம்எல்ஏக்கள் வேட்புமனுவில் தெரிவித்த விவரங்களை ஆய்வு செய்து ஜனநாயக மறுமலர்ச்சி அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
     இது தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
     மேற்கண்ட 5 மாநிலங்களில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 812 எம்எல்ஏக்களில் 294 பேர் (36 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 176 பேர் மீது (22 சதவீதம்) பேர் மீது கொலை உள்ளிட்ட மிகத் தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
     5 மாநிலங்களிலேயே கேரளத்தில்தான் மிக அதிகபட்சமாக 62 சதவீத எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் 32 சதவீத எம்எல்ஏக்கள் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன.
     கேரளத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் குற்றப் பின்னணி உடைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த தேர்தலில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்தது. இந்தத் தேர்தலில் அது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
     தமிழகத்தில் புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களில் 34 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஆவர். காங்கிரஸ் உறுப்பினர்களில் 71 சதவீதம் பேர் மீதும், திமுக உறுப்பினர்களில் 48 சதவீதம் பேர் மீதும், அதிமுக உறுப்பினர்களில் 22 சதவீதம் பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai