Enable Javscript for better performance
ஜூன் 7-இல் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 7-இல் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

    By  புது தில்லி,  |   Published on : 21st May 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16

    பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜூன் 7-ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
     இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
     பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஜூன் மாதம் 4-ஆம் தேதி கத்தார் நாட்டுக்குச் செல்லவிருக்கிறார். பின்னர், ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
     இப்பயணத்தின் போது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் பராக் ஒபாமாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாட உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
     அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் ஐந்தாவது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
     முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி (1985), பி.வி.நரசிம்ம ராவ் (1994), அடல் பிஹாரி வாஜ்பாய் (2000), மன்மோகன் சிங் (2005) ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கின்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai