Enable Javscript for better performance
நாளை அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

    By  குவாஹாட்டி,  |   Published on : 21st May 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12

    அஸ்ஸாம் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.
     இந்தக் கூட்டத்தில், பாஜக முதல்வர் வேட்பாளர் சர்வானந்த சோனோவால், சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் குழுவின் தலைவராக (முதல்வர்) தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
     புதிய அரசு 24-இல் பதவியேற்பு: அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான புதிய அரசு, வரும் 24-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ளவிருப்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சர்வானந்த சோனோவால் தெரிவித்தார்.
     126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக 60 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அúஸாம் கண பரிஷத் (ஏஜிபி) 14 இடங்களிலும், போடோ மக்கள் முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
     இதுகுறித்து குவாஹாட்டியில் சர்வானந்த சோனோவால், பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     பாஜக தலைமையிலான புதிய அரசு, வரும் 24-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ளவுள்ளது.
     குவாஹாட்டியில் உள்ள கானாபாரா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் சர்வானந்த சோனோவால்.
     முன்னதாக, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள், சோனோவாலை குவாஹாட்டியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai