Enable Javscript for better performance
மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா 30-இல் இந்தியா வருகை- Dinamani

சுடச்சுட

    

    மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா 30-இல் இந்தியா வருகை

    By  புது தில்லி,  |   Published on : 21st May 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இந்த மாதம் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
     கடந்த 7 மாதங்களில் 3-ஆவது முறையாக, அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
     அப்போது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும், இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றத்தைச் சமாளிப்பது பற்றியும் தில்லியில் பேசவுள்ளார்.
     அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொழில் முனைவோர்களையும், மென்பொருள் உருவாக்குநர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
     ஆந்திர மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு வந்தபோது தொழிலதிபர்களான மகிந்திரா குழுத் தலைவரையும், ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரையும் சந்தித்தார்.
     அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில் வந்தபோது, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த அவர், ஹைதரபாதில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai