மோடிக்கு இணையான தலைவர்கள் நாட்டில் யாரும் இல்லை: வெங்கய்ய நாயுடு

பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாக நாட்டில் வேறு எந்தத் தலைவர்களும் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாக நாட்டில் வேறு எந்தத் தலைவர்களும் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவரிடம், பாஜக அல்லாத கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தலைவருமான நிதீஷ் குமார், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக உருவெடுப்பாரா? எனக் கேட்கப்பட்டதற்கு, பாஜகவுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும், முரண்பாடுகளால் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

மோடிக்கு மாற்று வேறு யாரும் இல்லை. ஆனால், அப்படி ஒரு மாற்றுசக்தி இருப்பதாக அவர்கள் பேசுகின்றனர்.

பிரதமராக வேண்டும் என்ற அபிலாஷையுடன் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், அந்தப் பதவி காலியில்லை. இரண்டாவது, இந்தக் கூட்டணிகள் அனைத்தும் முரண்பாடுகளைக் கொண்டவை ஆகும்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக நிதீஷ் குமாரால் முன்வைக்கப்பட்ட கூட்டாட்சிக் கூட்டணியானது, ஏற்கெனவே முயற்சிக்கப்பட்ட, பரிசோதனை நடத்தப்பட்ட, தோல்வியடைந்த கூட்டணியாகும்.

முதலாவதாக, பிகாரில் தற்போது என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். அந்த மாநிலம் மீண்டும் காட்டாட்சியின் கீழ் தள்ளப்பட்டு விட்டது. மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு, பிகாருக்கு வெளியே செல்வாக்கு கிடையாது.

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி முன்பு ஆதிக்கம் செலுத்தியது. தற்போது அந்த இடத்தை பாஜக பிடித்துள்ளது. பாஜக தேசியவாதிகள் கொண்ட கட்சி மட்டுமல்ல;  தற்போது உண்மையான தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியினர் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தை எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கவில்லை? என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com