ரூ.11 லட்சம் கோடி டெபாசிட்டாகக் கிடைக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சுமார் ரு.11 லட்சம் கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
ரூ.11 லட்சம் கோடி டெபாசிட்டாகக் கிடைக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்


புது தில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சுமார் ரு.11 லட்சம் கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை எதிர்த்து விவேக் நாராயணன், சங்கம்லால் பாண்டே என்பவர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், சுமார் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதுவரை பல்வேறு வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com