Enable Javscript for better performance
அனைத்து நகரங்களிலும் மின்னணு பரிவர்த்தனை: மத்திய அரசு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து நகரங்களிலும் மின்னணு பரிவர்த்தனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் உள்ள 4,041 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
    மின்னணு பரிவர்த்தனை தொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வழியாக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் ராஜீவ் கௌபா, ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    அப்போது, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று 4,041 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    அப்போது, மத்தியப் பிரதேச அதிகாரிகள் சிலர், தங்கள் மாநிலத்தில் உள்ள 7 முக்கிய நகராட்சி அமைப்புகளில் மின்னணு பரிவர்த்தனை முறையை கொண்டுவந்து விட்டோம்.
    அடுத்து ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் உள்ள 378 நகரங்களில் மின்னணு பரிவர்த்தனை முறையை கொண்டுவந்துவிடுவோம் என்று தெரிவித்தனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai