Enable Javscript for better performance
அஸ்ஸாம்: பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் பாலம் ஒன்றிலிருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    ஒரு குழுவினர் சுற்றுலா சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
    சோனித்பூர் மாவட்டம், பலுக்பாங் பகுதியில் உள்ள பாலத்தில் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.
    இதில், அந்தப் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai