Enable Javscript for better performance
ஆங்கிலத்தில் மட்டுமே வழக்கு விசாரணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டவட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆங்கிலத்தில் மட்டுமே வழக்கு விசாரணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டவட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngt

    தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று அந்தத் தீர்ப்பாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    யமுனை நதிக் கரையில் மாடுகளை வெட்டுவதால் அந்த நதிநீர் மாசுபடுவதாக ஓஜஸ்வி கட்சி என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டிருந்ததால் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
    இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓஜஸ்வி கட்சி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
    ஹிந்தி தேசிய மொழி என்பதால், அந்த மொழியில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புதிய மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
    அந்த மனுவை விசாரித்த நீதிபதி யு.டி. சால்வி தலைமையிலான அமர்வு தெரிவித்ததாவது:
    ஹிந்தி தேசிய மொழி என்பது ஒரு மாயையாகும். அந்த மாயையின் அடிப்படையில் ஓஜஸ்வி தாக்கல் செய்திருந்த முதல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.
    தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் விதி 33-ன்படி ஆங்கிலத்தில் மட்டுமே வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai