Enable Javscript for better performance
இன்று மீண்டும் ஏலத்துக்கு வருகிறது மல்லையாவின் சொகுசு விமானம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று மீண்டும் ஏலத்துக்கு வருகிறது மல்லையாவின் சொகுசு விமானம்

    By DIN  |   Published on : 28th November 2016 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijaymallya-plane

    தொழிலதிபர் விஜய் மல்லையா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த சொகுசு விமானம் திங்கள்கிழமை (நவம்பர் 28) மீண்டும் ஏலத்துக்கு வருகிறது.
    பொதுத் துறை நிறுவனமான எம்எஸ்டிசி இந்த ஏலத்தை இணையவழியில் நடத்துகிறது. இதற்கு முன்பும் இருமுறை இந்த சொகுசு விமானம் ஏலத்துக்கு வந்தது. ஆனால், அதனை வாங்க எவரும் முன்வரவில்லை. ஏனெனில், அப்போது ஏலத்தின் ஆரம்ப விலை ரூ.152 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
    சேவை வரித் துறைக்கு மல்லையா செலுத்த வேண்டிய ரூ.535 கோடியை மீட்கும் நடவடிக்கையாக இந்த ஏலம் நடைபெறுகிறது. நவம்பர் 28, 29 ஆகிய இரு தேதிகளில் சொகுசு விமானத்தை ஏலம் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது ஏலத்துக்கான தொடக்க விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடக்கவிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏலத்தில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
    முதல் இருமுறையும் விமானம் ஏலம் போகாததால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏலம் கோருபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சர்வதேச அளவில் பத்திரிகைகளில் இந்த சொகுசு விமான ஏலம் தொடர்பாக விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனவே, இந்த முறை விமானம் விலை போய்விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக நடைபெற்ற ஏலத்தின்போது விமானத்துக்கு அதிகபட்சமாக ரூ.27 கோடி மட்டுமே தர தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai