Enable Javscript for better performance
எதிர்க்கட்சிகளுக்கு நிதி நெருக்கடி கொடுக்கவே ரூபாய் நோட்டு வாபஸ்: சமாஜவாதி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    எதிர்க்கட்சிகளுக்கு நிதி நெருக்கடி கொடுக்கவே ரூபாய் நோட்டு வாபஸ்: சமாஜவாதி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 28th November 2016 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்று ஆளும் சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியது.
    இதுகுறித்து லக்னெளவில் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மய் நந்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
    அதிக மதிப்புடைய நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள், அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து அக்கட்சிக்கு பாடம் புகட்டுவர். ரூபாய் நோட்டு தொடர்பாக பாஜக எடுத்த முடிவு, தங்கள் கட்சிக்குப் பாதகமாக முடியும் என்பதை அவர்கள் உணரவில்லை.
    அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் தடை செய்வதன் மூலம், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளை தேர்தல் செலவுகளுக்கு பணத்தை எடுக்க முடியாமல் நிதி நெருக்கடியில் ஆழ்த்திவிட பாஜக அரசு முயல்கிறது.
    எங்கள் கட்சி கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம், கொள்கை உருவாக்குபவர்களின் அனுபவமின்மையைக் காட்டுகிறது. இந்தப் பரந்த நாட்டில், ஒவ்வொரு 5 கிராமங்களுள் 4 கிராமங்களில் வங்கி வசதிகள் இல்லை. அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக பணக்காரர்களைச் சார்ந்துள்ளனர்.
    ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்காமல் அவர்கள் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாமல் பட்டினி கிடக்கின்றனர். பணத்தை எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரை அறிவுறுத்தியுள்ளார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai