Enable Javscript for better performance
தாணே: கள்ள ரூபாய் நோட்டை வங்கியில் செலுத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தாணே: கள்ள ரூபாய் நோட்டை வங்கியில் செலுத்தியவர் கைது

    By DIN  |   Published on : 28th November 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியதாக பழைய காகித வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    உல்ஹாஸ் நகரைச் சேர்ந்த பங்கஜ் பி.கோரி(30) என்பவர், பழைய காகித வியாபாரம் செய்து வருகிறார். இவர், அரசு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகளாக ரூ.1.05 லட்சத்தை அங்குள்ள பொதுத் துறை வங்கியொன்றில் கடந்த 24-ஆம் தேதி செலுத்தினார். அந்த நோட்டுகளை சரிபார்த்ததில், அவற்றில் 11 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
    அதைத் தொடர்ந்து, கள்ள ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியதாக பங்கஜ் பி.கோரி மீது உல்ஹாஸ்நகர் காவல் நிலையத்தில் மறுநாள் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்கு தாணே காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக, பங்கஜ் பி.கோரி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai