Enable Javscript for better performance
நாடு தழுவிய வேலை நிறுத்தம் பிசுபிசுக்கும்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் பாஜகவுக்கு மக்களாதரவு இருப்பதால், அந்த முடிவுக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் பிசுபிசுக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்த்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது கண்கூடாகத் தெரிகிறது. அந்த நடவடிக்கைக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஒரு சில கட்சிகளே ஆதரவு தெரிவித்துள்ளன.
    தொடக்கத்தில் அந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் கூட, பொதுமக்கள் பாஜகவின் பக்கம் இருப்பதைக் கண்டு அஞ்சி போராட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளன.
    காங்கிரஸ் கூட அந்தப் போராட்டத்தை "நாடு தழுவிய வேலை நிறுத்தம்' என்று அழைக்க மறுக்கிறது. எனவே அந்தப் போராட்டம் தோல்வியடையும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai